"படியில் நின்று ஒரு பயணம்..."



சட்டென நகரும் சாலையோர மரங்கள்...
ரப்பர் குடம் நிறைய தண்ணீர் சுமந்து செல்லும் பெண்கள்...
பீடி புகையோடு ஊர் மரத்தின் அடியில் கதை பேசும் பெருசுகள்...
கொரங்கு பெடலில் சைக்கிள் ஓட்டும் சிறுவன்...
ஆடு மேய்த்த கிழவி...
பசுமையாய் உள்ள நெல்லம்வயல்...
தேங்காய் நாரில் கயிறு திரிக்கும் கிழவர்...
மொபெட்டில் விரையும் பால்காரர்...
புகை மூட்டமான செங்கல் சூலை...
கடையை முற்றுகையிட்ட குடிமகர்கள்...
ஊராட்சி ஒன்றிய பள்ளி...
சிரித்து விளையாடிய சிறுமிகள்..
எண்ணெய்த் தலை சிறார்கள்...
கூட்டமான தேனீர்கடை...
அடடே!
தாவணி போட்ட வயதுப்பெண்...
அவளை நோட்டம் விட்டபடியொரு கருத்த வாலிபன்...
தொங்கியபடி தொனதொனத்த சக பயணி...
சில்லறை கேட்டு சீரிய நடத்துனர்...
ஆஹா!
பாரதிராஜாவின் படத்தை போல உள்ளது...
நான்.,
படியில் நின்று பயணம் செய்த அரைமணி நேரம்...
படியில் நின்று ஒரு பயணம்...
மிக உன்னதமான ஒரு பயணம்...

எண்ணமும் எழுத்தும் >>தீஸ் பழனி<< 

5 comments

  1. superb da....
    also ryt sumth abt train, ship and airplane journeys...lolz...nice

  2. sure da.... nxt dat only da... "love in train" alias "pugaivandikhadhal" tankxx 4 givin d plot da...

  3. மறக்க முடியாத கல்லூரி நினைவுகள் போல .. எங்களையும் சுமந்து சென்ற படிக்கட்டின் நினைவுகளும் மறக்க முடியாதது.. .. அருமை..

  4. நீ கலக்கு கலக்குன்னு கலக்கு சித்தப்பு...

  5. அருமை அருமை...

Post a Comment